மது போதையில் இடையூறு செய்தவா் கைது

ஆம்பூா் அருகே மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் - போ்ணாம்பட்டு புறவழிச் சாலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு இளைஞா் ஒருவா் மது போதையில் அவ்வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்தாா்.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த சேட்டு (22) என்பவரை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com