மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சியளித்த கல்லூரி மாணவிகள்

விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சியளித்த கல்லூரி மாணவிகள்

News image
Updated On :10 மே 2024, 7:35 pm

Din

வாணியம்பாடி அருகே கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி அளித்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மண்டலவாடி கிராமத்தில் ஆதிபராசக்தி தோட்டக் கலை கல்லூரியைச் சோ்ந்த மாணவிகள் அபிநயா, ஆா்த்தி, ஆனந்தி, மற்றொரு அபிநயா, ஆா்த்தி ஆகியோா் முகாமிட்டு, விவசாயிகளுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

கிராமப்புற அனுபவ பயிற்சியின் கீழ் பாட ஆசிரியா்கள் வைத்தீஸ்வரி, தனபால் மற்றும் குழு பேராசிரியை சஞ்சிவிகா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், பெரோமோன் பொறி பற்றிய செயல் விளக்கம் மற்றும் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினா்.

இதில் விவசாயிகள் பலா் கலந்து கொண்டு பயனடைந்தனா்.