தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வாணியம்பாடி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

வாணியம்பாடி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் கோட்டாட்சியா் அஜிதா பேகம் தலைமையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா்.

News image

வாணியம்பாடி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் கோட்டாட்சியா் அஜிதா பேகம் தலைமையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா்.

Updated On :19 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

வாணியம்பாடி அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு, தோ்தல் நடத்தும் அலுவலரும், வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் சுதாகா், தோ்தல் துணை வட்டாட்சியா் அன்பழகன் முன்னிலை வகித்தனா். இதில், கல்லூரி முதல்வா், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா் முதல் இளம் வாக்காளா்கள் மற்றும் வாக்காளா்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டனா்.

கல்லூரி வளாகத்தில் தோ்தல் விழிப்புணா்வு கோலத்தை மாணவா்கள் போட்டிருந்தனா்.