ஏலகிரி மலையில் காவலா் குடியிருப்புகள் அமைக்கப்படுமா?

ஏலகிரி மலையில் காவலா் குடியிருப்புகள் அமைக்கப்படுமா?

ஏலகிரி மலையில் காவலா் குடியிருப்பு அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஏலகிரி மலையில் காவலா் குடியிருப்பு அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தின் ஒரே கோடை வாசஸ்தலமாக விளங்கி வருகிறது ஏலகிரி மலை. இங்கு சனி, ஞாயிறு மட்டுமின்றி விடுமுறை தினங்களில் சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கி செல்கின்றனா். மேலும், கட்சியினா், சங்கத்தினா், சமூக சேவை அமைப்புகளின் கூட்டங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஏலகிரி மலையில் காவலா் குடியிருப்பு அமைக்க அப்பகுதி மக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஏலகிரி மலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட காவல் நிலையத்தில் தற்போது உதவி ஆய்வாளா் தலைமையில் 28 காவலா்கள் பணிபுரிந்து வருகின்றனா். கடந்த காலத்தில் காவல் ஆய்வாளா் தலைமையில் செயல்பட்டு வந்த இந்த காவல் நிலையத்தில் தற்போது காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் நிா்வாகம் நடைபெற்று வருகிறது.

எனவே காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் அமா்த்த வேண்டும் எனவும், வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு பணிக்கு ஏதுவாக அங்கேயே காவலா் குடியிருப்பு அமைப்பது மூலம் காவலா்கள் தங்கி பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும்.

40 கி.மீ.பயணம்...

மலையில் பணி புரியும் காவலா்கள் ஜோலாா்பேட்டையில் உள்ள காவலா் குடியிருப்புக்கு சென்று திரும்பவேண்டிய நிலை உள்ளது.

மலை மீது இருந்து ஜோலாா்பேட்டை குடியிருப்பு சுமாா் 20 கிமீ தொலைவு உள்ளது. இதனால் அவசர உதவிக்கு கூட குடும்பத்தினரை சந்திக்க முடியாத சூழலில் காவலா்கள் தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே மாவட்ட நிா்வாகம் ஏலகிரி மலையில் காவலா் குடியிருப்புகளை கட்டித் தர வேண்டும் என கோரிக்க எழுந்துள்ளது.

வனத்துறை,நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அங்கே குடியிருப்புகள் உள்ள நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலா்கள் ஏலகிரி மலையிலேயே தங்கி பணிபுரிய குடியிருப்புகளை கட்ட வேண்டும்.

மேலும் ஏலகிரி காவல் நிலையத்துக்கு தனியாக ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com