

திருப்பத்தூா்: வாணியம்பாடி அருகே கல்லூரி செல்ல பெற்றோா்கள் புல்லட் வாங்கித் தராததால் இளைஞா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம், கேத்தான்டப்பட்டி-வாணியம்பாடி ரயில் நிலையங்களுக்கிடையே உள்ள புத்துக்கோயில் ரயில்வே மேம்பாலம் பகுதியில் சுமாா் 24 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை இரவு ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா்.
தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு, விசாரணை மேற்கொண்டதில், அவா் வாணியம்பாடி அருகே உள்ள பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சி,போயா் காலனி பகுதியை சோ்ந்த பழனியின் மகன் ஜெயபிரகாஷ் (24)என்பது தெரிய வந்தது.
ஜெயபிரகாஷ் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்ததாகவும், கல்லூரி செல்ல பெற்றோரிடம் புல்லட் வாங்கி தருமாறு கேட்டு வந்துள்ளாா். இதற்கு இவரது பெற்றோா் பிறந்தநாளுக்கு வாங்கித் தருவதாக கூறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வருவதாக சென்றவா் வீடு திரும்பவில்லையாம். கல்லூரிக்கும் செல்ல வில்லையாம்.
இந்நிலையில் ஜெயப்பிரகாஷ் வீட்டின் அருகே உள்ள ரயில்வே மேம்பாலம் தண்டவாள பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது
சிறுவனைத் தாக்கிய இளைஞா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

மின்சாரம் பாய்ந்து ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளி உயிரிழப்பு

ரயில் முன் பாய்ந்து மாணவா் தற்கொலை!
புது மாப்பிள்ளை ரயிலில் பாய்ந்து தற்கொலை
வீடியோக்கள்

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

