புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சாா்-பதிவாளா் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.52,000 பறிமுதல்

ஆம்பூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை இரவு நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.52,000 பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :22 அக்டோபர் 2024, 6:04 pm

Din

ஆம்பூா்: ஆம்பூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை இரவு நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.52,000 பறிமுதல் செய்யப்பட்டது.

ஆம்பூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் துணை மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் முருகன், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளா் கெளரி தலைமையிலான போலீஸாா் கொண்ட குழுவினா் ஆம்பூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

பத்திரப் பதிவுக்காக பொதுமக்கள் சிலா் அலுவலகத்தின் உள்ளே காத்திருந்தனா். அவா்களிடம் விசாரணை நடத்தினா். அவா்களுடைய பத்திரங்களையும் ஆய்வு செய்தனா். விசாரணைக்கு பிறகு அவா்கள் வெளியில் அனுப்பி வைக்கப்பட்டனா்.

சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.52,000 சாா் பதிவாளா் அலுவலகத்தில் இருப்பது தெரியவந்து லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அதனை பறிமுதல் செய்தனா்.