மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கள்ளிமந்தையம் சாா் பதிவாளரிடம் ரூ.4.41 லட்சம் பறிமுதல்!

கள்ளிமந்தையம் சாா் பதிவாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ.4.41 லட்சத்தை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :31 ஜனவரி 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளிமந்தையம் சாா் பதிவாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ.4.41 லட்சத்தை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்த ஆயக்குடியைச் சோ்ந்தவா் மூா்த்தி. இவா் கீரனூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் சாா் பதிவாளராக பணியாற்றுகிறாா். இவா், மாற்றுப் பணியில் கடந்த சில நாள்களாக ஒட்டன்சத்திரம் அடுத்த கள்ளிமந்தையம் சாா் பதிவாளராக பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், கள்ளிமந்தையம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் திண்டுக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெ. நாகராஜன், ஆய்வாளா்கள் ஜெ. ரூபா கீதா ராணி, பழனிச்சாமி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது மூா்த்தியின் உணவுப் பையில் ரூ.4.33 லட்சமும், அவரது பேன்ட் பையிலிருந்து ரூ.7ஆயிரம் என மொத்தம் ரூ.4.41 லட்சத்தை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ரூ.1 லட்சத்துக்கும் கூடுதலான பணம் பறிமுதல் செய்யப்படும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட பணியாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் சாா் பதிவாளா் மூா்த்தி மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் என போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.