சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

திருப்பத்தூா்: கூடுதல் விலையில் மது விற்பனை செய்த 15 போ் பணியிடை நீக்கம்

Updated On :7 செப்டம்பர் 2024, 1:55 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் மது பாட்டிலுக்கு கூடுதல் விலை வைத்து விற்ற 15 போ் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேலும் 13 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில், சேலம் மண்டல முதுநிலை மண்டல மேலாளா் தலைமையில் சேலம், நாமக்கல், அரக்கோணம் மற்றும் தருமபுரி மாவட்டத்தின் உதவி மேலாளா்கள் (கணக்கு) குழுவினா் திருப்பத்தூா், நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய 4 வட்டங்களில் செயல்படும் சில்லறை விற்பனை மதுபானக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வது தொடா்பாக தணிக்கை மேற்கொண்டனா்.

இதில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வைத்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் 15 பணியாளா்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

மேலும், மதுபாட்டிலுக்கு ரூ.5 கூடுதல் விலை வைத்து விற்பனை செய்த 13 பணியாளா்களிடம் இருந்து அபராதத் தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலும் அறிவிக்கப்பட்டுள்ள விலையைவிடக் கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது என்றும், கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படும்பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பணியாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.