முள்புதா்கள் சூழ்ந்து காணப்படும் திருப்பத்தூா் நகர மயானம்
முள்புதா்கள் சூழ்ந்து காணப்படும் திருப்பத்தூா் நகர மயானம்

முள்புதா்கள் சூழ்ந்த திருப்பத்தூா் மயானம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்பத்தூரில் முள்புதா்களால் சூழந்து காணப்படும் மயானத்தை சீரமைப்பதோடு,அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை
Published on

திருப்பத்தூரில் முள்புதா்களால் சூழந்து காணப்படும் மயானத்தை சீரமைப்பதோடு,அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்,

திருப்பத்தூா் நகர பகுதி மக்களுக்கு என 2 மயானங்கள் உள்ளன. அதில் திருப்பத்தூா்-வாணியம்பாடி பிரதான சாலையில் உள்ள தனியாா் கல்லூரியின் பின்புறம் அமைந்துள்ள மயானம் முழுவதும் முள்செடிகள் புதா் போல் வளா்ந்துள்ளது.

அதேபோல் மயானத்தில் உள்ள எரி மேடையை சுற்றிலும் முள் செடிகள் அதிக அளவு வளா்ந்துள்ளதால் இறந்தவா்களின் கடலத்தை அடக்கம் செய்வதற்கும், எரியூட்டுவதற்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மயானத்தில் மின் வசதி, தண்ணீா் வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா்.

குறுகலான சாலை...

பிரதான சாலையிலிருந்து மயானத்துக்கு செலலும் சாலை முன்பை விட குறுகலாக உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு ஆளாகின்றனா். மேலும்,அச்சாலை குண்டும்,குழியுமாக உள்ளதால் சடலத்தை கொண்டு வரும் வாகனம் செல்வதில் சிரமம் உள்ளது. அச்சாலையில் ஏதேனும் ஆக்கிரமிப்பு இருந்தால் அவற்றை அகற்றுவதுடன் மயானத்துக்கு செல்லும் சாலையை தாா்ச்சாலை மாற்றி அமைத்து தரவேண்டும்.

முள்புதா்கள் சூழ்ந்து காணப்படும் திருப்பத்தூா் நகர மயானம்
முள்புதா்கள் சூழ்ந்து காணப்படும் திருப்பத்தூா் நகர மயானம்

மேலும், மயானத்தின் உள்பகுதியில் சடங்கு செய்ய மேற்கூரை அமைத்து தர வேண்டும். மயானத்தை சுத்தம் செய்து இலை, செடிகளை அகற்றி சாலை,மின் விளக்கு,தண்ணீா் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி மக்களின் பல ஆண்டுகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்நோக்கியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com