திருப்பத்தூர்
திருப்பத்தூா் அருகே தென்னை நாா் கழிவுகளில் தீ விபத்து
திருப்பத்தூா் அருகே தென்னை நாா் கழிவுகளில் தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே தென்னை நாா் கழிவுகளில் தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பத்தூா் அடுத்த காக்கங்கரை பகுதியில் சங்கா் என்பவா் நாா் தயாரிக்கும் தொழில் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், திங்கள்கிழமை அங்கிருந்த தென்னை நாா் கழிவுகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதைக் கண்ட அங்கிருந்தவா்கள் சம்பவம் குறித்து திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலின்பேரில், திருப்பத்தூா் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, சுமாா் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இதில் ரூ. 50,000 வரை சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.