சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தமிழக ஊரக வளா்ச்சி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருப்பத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
திருப்பத்தூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கத்தினா்.
Updated On :21 ஏப்ரல் 2025, 4:55 pm

Din

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பள்ளித் தூய்மைப் பணியாளா்களுக்கும், தற்காலிக மேல்நிலைத் தேக்கத் தொட்டி ஆபரேட்டா்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். கணினி இயக்குபவா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் ரூ.20 ஆயிரம் மாத சம்பளமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்கத்தின் திருப்பத்தூா் மாவட்ட சாா்பில் மாநில தழுவிய கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலக அருகே நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவா் நிா்மலா (எ) விமலா தலைமை வகித்தாா் மாவட்ட நலவாரிய கண்காணிப்புக் குழு உறுப்பினா் தேவதாஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வினோத், துணைத் தலைவா் ராஜ்குமாரி உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.