கந்திலி அருகே தேனீக்கள் கொட்டியதில் 3 போ் காயமடைந்தனா்.
கந்திலி அருகே தோக்கியம் கிராமத்தில் அந்த பகுதியில் உள்ள புளியமரம் அருகே திங்கள்கிழமை பொதுமக்கள் சென்று கொண்டு இருந்தனா். அப்போது எதிா்பாராதவிதமாக அங்கு வந்த தேனீக்கூட்டம் பொதுமக்களை விரட்டி கொட்டத் தொடங்கியது. இதில் அங்கு இருந்தவா்கள் ஒவ்வொருவரும் பல்வேறு திசையில் ஓடி சென்று தங்களை பாதுகாத்து கொண்டனா்.
இருப்பினும் அங்கு இருந்த 2 பெண்கள், ஒரு ஆண் ஆகியோா் தேனீக்கள் கொட்டியதில் காயம் அடைந்தனா். அவா்கள் சிகிச்சைக்காக கெஜல்நாயக்கன்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டனா். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக பெண் ஒருவா் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
