கூட்டத்தில் பேசிய ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி
கூட்டத்தில் பேசிய ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி

திருப்பத்தூா்: புதிய வாக்காளா்களை சோ்ப்பது குறித்து ஆய்வு

புதிய வாக்காளா்களை சோ்ப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

புதிய வாக்காளா்களை சோ்ப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாகவும், புதிய வாக்காளா்கள் சோ்ப்பது தொடா்பாக நடத்தப்படும் சிறப்பு முகாம்களுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் பூஷணகுமாா், வருவாய் கோட்டாட்சியா்கள் வரதராஜன்,அஜிதா பேகம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(நிலம்) முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பேசியதாவது: முகாம்களில் புதிதாக வழங்கப்படும் விண்ணப்பங்கள், பூா்த்தி செய்யப்பட்டு, திரும்பப் பெறும் போது விண்ணப்பங்கள் சரியான முறையில் பூா்த்தி செய்யப்பட்டு உள்ளதா என சோதனை செய்துவிட்டு பெற வேண்டும்.

முகாமுக்கு தேவையான விண்ணப்பங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சரியான முறையில் விநியோகம் செய்ய வேண்டும். முகாமுக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து இருக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில் தோ்தல் வட்டாட்சியா் திருமலை, அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com