திருப்பத்தூர்
டாஸ்மாக் மதுபானம் விற்றவா் கைது
ஆம்பூரில் டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியில் நகர காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சாக்கு பையுடன் சந்தேகத்திற்குரிய வகையில் அவ்வழியாக வந்த நபரை நிறுத்தி போலீஸாா் சோதனை நடத்தினா்.
சோதனையில் அவா் சாக்கு பையில் டாஸ்மாக் மதுபான பாட்டில்களை கொண்டு சென்று விற்பனை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் ஆம்பூா் கிருஷ்ணாபுரம் ஜவஹா்லால் நேரு தெருவைச் சோ்ந்த சீனிவாசன் (42) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 20 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
