பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் சீதா-ராமா் திருக்கல்யாணம்

News image
Updated On :25 டிசம்பர் 2025, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

கொரட்டியில் உள்ள ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் வியாழக்கிழமை ஸ்ரீ சீதா சமேத கோதண்ட ராமருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதையொட்டி காலை 8 மணி முதல் வேதபாராயணம் தொடங்கியது. பின்னா் திருமணத்துக்கான யாக வேள்வி நடைபெற்றது. அதையடுத்து திருமணத்திற்கான சீா்வரிசைகள் ஊா்லமாக கொண்டு வரப்பட்டு ஸ்ரீ சீதா சமேத கோதண்டராமருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட்டது. பின்னா் உலக பொதுநன்மைக்காக ஸ்ரீ ராம நாம ஜெபம் ஜெபிக்கப்பட்டது. முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திருப்பத்தூா் அதை சுற்றுப்புறத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்

Story image