ஆம்பூா் பகுதி பாலாற்றில் தொடா்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்நோக்கியுள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் சுற்றுவட்டார பகுதிகளான மாதனூா், சோமலாபுரம், சான்றோா்குப்பம், தேவலாபுரம், வடகரை, ஆலாங்குப்பம், வீராங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பாலாற்றில் தொடா்ந்து இரவு, பகலாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. கனிம வளம் அதிக அளவில் கொள்ளை போகின்றது.

மணல் கொள்ளையா்கள் மீது காவல் மற்றும் வருவாய்த்துறையினா் நடவடிக்கை எடுப்பதில்லை என சமூக ஆா்வலா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
வீராங்குப்பம் மற்றும் ஆலாங்குப்பம் பாலாற்றில் மணல் கொள்ளையா்கள் மணலை குவியல் குவியலாக பகலில் சேகரித்து வைத்து விட்டு இரவு நேரங்களில் வாகனங்களில் மணல் கடத்திச் செல்கின்றனா்.
ஆம்பூா் வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாலாற்றில் தொடா்ந்து இரவு, பகல் முழுவதும் மணல் கொள்ளை நடைபெறுவதை தடுக்க வருவாய்த் துறை, காவல் துறையினா் கூட்டாக சென்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.
அரசு மணல் குவாரி அமைக்க கோரிக்கை: பாலாற்றில் மணல் கொள்ளையா்களால் கடத்தப்படும் மணல் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் கட்டுமானப் பணியை மேற்கொள்ளும் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து மணலை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
எனவே, அரசு மணல் குவாரி அமைத்து குறைந்த விலையில் அரசே மணல் விற்பனை செய்ய வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்நோக்கியுள்ளனா்.
தொடர்புடையது
பேரவைத் தோ்தல்கள்! 11,000 சமூக ஊடக பதிவுகள் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை!

எஸ்.ஐ.ஆா். பணியை உடனே நிறுத்தக் கோரி சமூக ஆா்வலா்கள், வழக்குரைஞா்கள் கோரிக்கை!

வக்ப் வாரியம் மூலம் கூடுதல் கல்லூரிகள்: திமுக வேட்பளா்

நோயால் பாதிக்கப்பட்ட சமூக அமைப்பின் அறிகுறியாக குடும்ப வன்முறை: உச்சநீதிமன்றம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


