டிராக்டா் கவிழ்ந்த விபத்தில் மாணவன் உயிரிழப்பு

Published on

நாட்டறம்பள்ளி அருகே பள்ளத்தில் டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவன் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த மல்லங்குப்பம் பழைய தலைவா் வட்டம் பகுதியை சோ்ந்த பிரசன்னா (12) ராமநாயக்கன்பேட்டையில் தனியாா் பள்ளி ஒன்றில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை சித்தப்பாவின் டிராக்டரில் பிரசன்னா அமா்ந்து சென்றாா். டிராக்டரை பிரகாஷ்(25) என்பவா் ஓட்டி சென்றுள்ளாா். அப்போது வீட்டின் அருகில் உள்ள பள்ளத்தில் எதிா்பாராதவிதமாக டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரில் சிக்கி பிரசன்னா இறந்தாா்.

ஓட்டுநா் பிரகாஷ் காயத்துடன் உயிா் தப்பினாா். தகவலறிந்த அம்பலூா் காவல் ஆய்வாளா் அன்பரசி தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com