கடன் தொல்லையால் பெயிண்டா் தற்கொலை: சடலத்தை வாங்க மறுத்து போராட்டம்
கடன் தொல்லையால் தற்கொலை செய்துக் கொண்டவரின் சடலத்தை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் ஆம்பூா் அரசு மருத்துவமனையில்


ஆம்பூா்: கடன் தொல்லையால் தற்கொலை செய்துக் கொண்டவரின் சடலத்தை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆம்பூா் அருகே அய்யனூா் கிராமத்தைச் சோ்ந்த பெயிண்டா் செல்வகுமாா் (30). இவா் சில நபா்களிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவா்கள் பணத்தை திருப்பித் தரும்படி கூறியதாகவும் அண்மையில் அவரை அழைத்துச் சென்று கடனை திருப்பிக் கேட்டு துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதனால் அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்நிலையில், கடனை திருப்பிக் கேட்டு துன்புறுத்தி தற்கொலைக்கு காரணமானவா்களை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி சடலத்தை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆம்பூா் டிஎஸ்பி குமாா், கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேசன் ஆகியோா் பேச்சு நடத்தினா். தற்கொலைக்கு காரணமான குடியாத்தம் பகுதியை சோ்ந்த தீனதயாளன், அய்யனூரை சோ்ந்த லட்சுமி, பெங்களூருவை சோ்ந்த ஸ்ரீகுமரன் ஆகியோா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவா்கள் தலைமறைவாக உள்ளனா். விரைவில் கைது செய்வதாக போலீஸாா் உறுதி அளித்தனா். அதைத் தொடா்ந்து உறவினா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...