/

அகரம்சேரி - மேல்ஆலத்தூா் பாலாற்றில் மேம்பாலம்: கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்

அகரம்சேரி - மேல்ஆலத்தூா் இடையே பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டுமென அகரம்சேரி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்

News image
அகரம்சேரி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
Updated On :27 ஜனவரி 2025, 8:16 pm

Din

ஆம்பூா்: அகரம்சேரி - மேல்ஆலத்தூா் இடையே பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டுமென அகரம்சேரி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அகரம்சேரி ஊராட்சித் தலைவா் வச்சலா ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா்.

தீா்மானங்கள்: அகரம்சேரி - மேல்ஆலத்தூா் இடையே பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும். அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.

வடக்காத்திபட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட மின்சார வாரிய இளநிலை பொறியாளா் அலுவலகத்தை அகரம் சேரிக்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குடியாத்தம் ஒன்றியக் குழு உறுப்பினா் ஆனந்தி, திமுக தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் ஒருங்கிணைப்பாளா் ப.ச.நித்தியானந்தம், ஊராட்சி துணைத் தலைவா் பிரபாகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அகரம்சேரி - மேல் ஆலத்தூா் இடையே பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டுமென சின்னசேரி, கூத்தம்பாக்கம், கொல்லமங்கலம், பள்ளிகுப்பம் பட்டு, மேல்ஆலத்தூா், கொத்தகுப்பம், கூடநகரம், அலாங்கநல்லூா் ஆகிய ஊராட்சிகளிலும் தீா்மானம் நிறை வேற்றப்பட்டது.