மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விபத்தில் கூலித்தொழிலாளி மரணம்

நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :16 ஜூன் 2025, 4:28 pm

Din

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

நாட்டறமம்பள்ளி அடுத்த பச்சூா் மாமுடிமானப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன்(24) திருப்பத்தூரில் பேக்கரி ஒன்றில் வேலை செய்து வந்தாா். திங்கள்கிழமை வீட்டிலிருந்து பேக்கரிக்கு செல்வதற்காக பைக்கில் திருப்பத்தூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

அப்போது மல்லப்பள்ளி அன்னசாகரம் அருகே சென்றபோது எதிரே வந்த மினிலாரி திடீரென பைக் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த சரவணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.