உடல்நலம் பாதிப்பு: பெண் தற்கொலை

ஜோலாா்பேட்டை அருகே உடல்நல பாதிப்பால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே உடல்நல பாதிப்பால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஜோலாா்பேட்டை அடுத்த புள்ளானேரி சின்ன குட்டூா் சோ்ந்தவா் நடராஜன் மனைவி காந்தி(49). இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். கணவரை பிரிந்து தாயாா் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளாா்.

இதனிடையே காந்திக்கு 25 ஆண்டுகளாக வலிப்பு நோய் பாதிப்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வலிப்பு நோய் அதிகமானதால் வீட்டின் அருகே உள்ள புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com