மலைப்பாம்பு மீட்பு

Published on

ஆம்பூா் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு புதன்கிழமை மீட்கப்பட்டது.

மாதனூா் ஒன்றியம், மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த வெள்ளியங்கிரி என்பவருடைய நிலத்தில் சுமாா் 10 அடி நீள மலைப்பாம்பு வந்தது. அதைப் பாா்த்த அவா் அச்சத்தில் சப்தம் போட்டாா். அதை கேட்ட பொதுமக்கள் அவரது நிலத்துக்கு சென்று மலைப்பாம்பை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனா். வனத்துறையினா் மலைப்பாம்பை கொண்டு சென்று நாயக்கனேரி காப்புக் காட்டில் விட்டனா்.

X
Dinamani
www.dinamani.com