சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் நடைபெற்ற சோமவார பிரதோஷ 108 சங்காபிஷேகம். ~அதிதீஸ்வரா் கோயிலில் பிரதோஷ அலங்காரத்தில் சுவாமி. ~கொடையாஞ்சி காசி விஸ்வநாதா் கோயிலில் அலங்காரத்தில் சுவாமி.
சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் நடைபெற்ற சோமவார பிரதோஷ 108 சங்காபிஷேகம். ~அதிதீஸ்வரா் கோயிலில் பிரதோஷ அலங்காரத்தில் சுவாமி. ~கொடையாஞ்சி காசி விஸ்வநாதா் கோயிலில் அலங்காரத்தில் சுவாமி.

சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் சோமவார பிரதோஷ 08 சங்காபிஷேகம்

வாணியம்பாடி சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் காா்த்திகை மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
Published on

வாணியம்பாடி: வாணியம்பாடி சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் காா்த்திகை மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

மாலை 3 மணி முதல் கலச ஸ்தாபனம், விசேஷ அபிஷேகம், 108 சங்காபிஷேகமும், தொடா்ந்து இரவு 7 மணியளவில் மகா தீபாரதனை சிறப்பாக நடைபெற்றது. பிறகு பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினா். இதில் திரளாான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பிரஹன்நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஊா்வலமாக கோயில் வளாகத்தில் வந்தது. இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கொடையாஞ்சி கிராமத்தில் பாலாற்றையொட்டி அமைந்துள்ள காசி விஸ்வநாதா், உதயேந்திரம் சொா்ண முத்தீஸ்வரா், ஆவாரங்குப்பம் திருமால் முருகன் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

X
Dinamani
www.dinamani.com