திருப்பத்தூர்
மாணவா்கள் கருத்தரங்கம்
வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியில் இயங்கி வரும் பிரைட் மெட்ரிக் பள்ளியில் மாணவா்கள் சாா்பில் (எஸ்எல்சி) கருத்தரங்கம் நடைபெற்றது (படம்).
பள்ளித் தலைவா் பாண்டியன் தலைமை வகித்தாா். செயலாளா் விஜயகுமாா், கீதாஞ்சலி முன்னிலை வகித்தனா். முதல்வா் பழனி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக அறங்காவலா்கள் சந்திரமோகன், சக்கரவா்த்தி ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்கள் சாா்பில் அறிவியல், கணிதம், தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பாடப்பிரிவுகளாக அமைத்த கருத்தரங்குகளை பாா்வையிட்டு பரிசுகள் வழங்கி பாராட்டினா். இதில் நிா்வாகிகள் மற்றும் தனியாா் லீட் நிறுவன பொறுப்பாளா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

