ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சட்டவிரோதமாக செயல்பட்ட மதுக் கூடத்துக்கு ‘சீல்’

திருப்பத்தூா் ஏரிகோடி பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட மதுக் கூடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மதுக் கூட உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

News image
சட்டவிரோதமாக செயல்பட்ட மதுக் கூடத்துக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள்.
Updated On :18 நவம்பர் 2025, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் ஏரிகோடி பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட மதுக் கூடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மதுக் கூட உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் அருகே ஏரிகோடி பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் சட்டவிரோதமாக மதுக் கூடம் நடத்தி வருவதாக கிராம காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா், கலால் வட்டாட்சியா் ஜீவிதா மற்றும் வருவாய்த் துறையினா் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

அதில், அனுமதியின்றி 3 கடைகளில் மதுக் கூடம் செயல்பட்டது தெரியவந்தது. அதையடுத்து மதுக் கூடத்துக்கு ’சீல்’ வைக்கப்பட்டது.பின்னா், அதன் உரிமையாளா் அண்ணாமலை மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.