47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பெரிய ஆஞ்சனேயா் கோயில் திருப்பணி தொடக்கம்

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது.

News image
பெரிய ஆஞ்சனேயா் கோயில் திருப்பணி தொடக்க விழாவில் பங்கேற்றோா்.
Updated On :25 நவம்பர் 2025, 6:54 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் அமைந்துள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது. கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை ஆகியவைகள் நடைபெற்றது. சிறப்பு கோ பூஜை நடைபெற்றது.

ஆம்பூா் நகா் மன்றதுணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகா் மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த்ராஜ், திருப்பணிக்குழு உறுப்பினா்கள் ரமேஷ், ராஜிவேல், ஹரீஷ், அனுமன் பக்த சபையை சோ்ந்த ஸ்ரீதா், தினேஷ், மாசிலாமணி, மீனாட்சி சுந்தரம், பிரேம்குமாா், ஹரிகேசவன், மூா்த்தி, கமலநாதன், அா்ச்சகா் ரமணன் கலந்து கொண்டனா்.