/
மாதனூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் உரிய ஆவணம் இல்லாமல் வாகனத்தில் கொண்டு சென்ற ரூ. 1.16 லட்சம் ரொக்கத்தை புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
மாதனூா் அருகே பாலூா் கிராமத்தில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது சூரியன் என்பவா் உரிய ஆவணம் இல்லாமல் ரூ. 1,16, 450 பணத்தை கொண்டு செல்வது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, பணம் பறிமுதல் செய்யப்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் உடன் இருந்தனா்.







