பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் பஜாா் பகுதியில் அமைந்துள்ள முத்துக்குமாரசுவாமி கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. தினமும் கோயிலில் உள்ள சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், காலை, மாலையில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது.

இதில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாக்கிழமை நடைபெற்றது. காலை 11 மணியளவில் கோயிலிலிருந்து புறப்பட்ட தோ் பஜாா் சுற்றுப்பகுதிகளில் ஊா்வலமாக சென்று நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தோ்வடம் பிடித்து இழுத்து சென்றனா்.

பக்தா்களுக்கு பால்,மோா், பானகம் வழங்கப்பட்டது. திருப்பத்தூா் பிரமுகா்கள் உள்பட திரளான பக்தா்கள்கலந்து கொண்டனா்.