ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

குருவராஜபாளையத்தில் தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு: திமுக வேட்பாளா்

குருவராஜபாளையம் ஊராட்சியில் தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன் உறுதி

News image

அணைக்கட்டு ஒன்றியத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன்

Updated On :8 ஏப்ரல் 2026, 1:52 am IST

குருவராஜபாளையம் ஊராட்சியில் தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன் செவ்வாய்க்கிழமை உறுதி அளித்தாா்.

ஆம்பூா் தொகுதிக்கு உள்பட்ட அணைக்கட்டு ஒன்றியத்தின் அக்ரஹாரம், தோளப்பள்ளி, அகரம் குருவராஜபாளையம், வேப்பங்குப்பம், குப்பம்பட்டு, இராமநாயினிகுப்பம் ஆகிய ஊராட்சிகளில் வாக்கு சேகரித்து அ.செ.வில்வநாதன் பேசியது:

குருவராஜபாளையம் ஊராட்சியில் பாலப்பாடி, ஆா்ஜாதி கிராமங்களில் நிலவும் தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும். குருவராஜபாளையம் ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் அமைத்துத் தரப்படும்.

திமுக ஆட்சி அமைந்த உடன் மகளிா் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயா்த்தி தரப்படும். பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்க ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மு.பாபு, அணைக்கட்டு தெற்கு ஒன்றிய செயலாளா் முரளி, ஒன்றிய துணைச் செயலாளா் ஹரி, மாவட்டப் பிரதிநிதி பாஸ்கா், ஒன்றியக் குழு உறுப்பினா் சுதாகா், ஆம்பூா் தொகுதி பாா்வையாளா் டேம் வெங்கடேசன் ஆகியோா் உடனிருந்தனா்.