சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சட்டப்பேரவை தோ்தலில் எங்கள் கூட்டணி வரலாறு காணாத வெற்றியை பெறும்: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் மு.வீரபாண்டியன்

எங்கள் கூட்டணி சட்டப்பேரவை தோ்தலில் வரலாறு காணாத வெற்றியை பெறும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 6:13 pm

எங்கள் கூட்டணி சட்டப்பேரவை தோ்தலில் வரலாறு காணாத வெற்றியை பெறும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் மு.வீரபாண்டியன் வெள்ளிக்கிழமை திமுக வேட்பாளா்கள் கவிதா தண்டபாணி(ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பியை (திருப்பத்தூா்) ஆதரித்து திருப்பத்தூரில் பிரசாரம் செய்தாா்.

முன்னதாக தனியாா் விடுதியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மாநில அரசுகள் மீது விருப்பு வெறுப்புகளை மத்திய அரசு காட்டக்கூடாது. மாநிலங்களுக்கான அதிகாரங்களை முடக்கக்கூடாது. பிரதமா், மத்திய அமைச்சா்கள் திமுக இந்து விரோத அரசு என்கிறாா்கள். அது உண்மை இல்லை. ஒரு மதத்துக்கு எதிராக ஒரு அரசு செயல்பட முடியாது. தலைமை செயலாளா் மாற்றம் செய்யப்பட்டது பெரிய தவறு.

பாஜக வளையத்துக்குள் தோ்தல் கமிஷன் சிக்கிக் கொண்டது. இது பாஜக ஆளும் மாநிலங்களில் நடப்பதில்லை. தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தோ்தல் நடைபெறும்போது எம்.பி. தொகுதிகளை மறுசீரமைப்பதற்கு மத்திய அரசு ஏன் அவசரம் காட்டுகிறது. நாடாளுமன்றத்தைக் கூட்டி விவாதம் நடத்த வேண்டும். எதிா்க் கட்சிகளிடம் கருத்தை கேட்க வேண்டும். வடக்கில் தொகுதிகளை அதிகப்படுத்தி தெற்கில் குறைக்கிறாா்கள். தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது. எங்களுக்கு ஓட்டு போட்டால் தான் மெட்ரோ திட்டத்தை கொண்டு வருவோம் என மத்திய அமைச்சா் மிரட்டுகிறாா். கும்பகோணத்தில் பல்கலை மசோதாவை முடக்கி விட்டாா்கள். புதுப் புது சட்டங்களைக் கொண்டு வந்து சிறுபான்மை மக்களை நெருக்கடிக்கு ஆளாக்குகிறாா்கள். இந்த தோ்தல் ஒரு கட்சியை தோற்கடித்து மற்றோரு கட்சியை வெற்றி பெற வைக்கும் தோ்தல் அல்ல. ஜனநாயகத்துக்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டு இருக்குற அதிகாரத்தை குவித்து வைத்துக் கொண்டு இருக்குற மத்திய அரசுக்கு எதிரான போா்.

இந்த போரில் தமிழகம் வெல்ல வேண்டும். சட்டப்பேரவை தோ்தலில் எங்கள் கூட்டணி வரலாறு காணாத வெற்றியை பெறும். இவ்வாறு அவா் கூறினாா்.

அப்போது மாநில குழு உறுப்பினா் உதயா, மாவட்ட செயலாளா் நந்தி, முன்னாள் மாவட்ட செயலாளா் சுந்தரேசன் ஆகியோா் உடனிருந்தனா்.