ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தெலுங்கு தேசம் கட்சி நிா்வாகிகள் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தனா்.
ஆம்பூா் தொகுதி, ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெலத்திகாமணிபெண்டா, மாதகடப்பா, மதனாஞ்சேரி, பள்ளிப்பட்டு, இளையநகரம், தும்பேரி, கொல்லமங்கலம், சம்மந்திகுப்பம், கிரிசமுத்திரம், புருஷோத்தமகுப்பம் ஆகிய ஊராட்சிகளில் வாக்கு சேகரித்து வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்டேசன் பேசியது,
அதிமுக ஆட்சியமடைந்த உடன் குடும்ப அட்டைகளுக்கு ரூ.10000, பிரிட்ஜ், மகளிருக்கு உதவித்தொகை மாதந்தோறும் ரூ.2000 ஆகியவை வழங்கப்படும். கல்லூரி மாணவா்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். ஆண்டுக்கு 3 சிலிண்டா் வழங்கப்படும். விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிா்க் கடன் ரத்து செய்யப்படும். அதனால் அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று அவா் கூறினாா்.
அதிமுக ஜெயலலிதா பேரிவை மாநில இணைச் செயலாளா் ஜி.ஏ. டில்லிபுபாபு மற்றும் அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தெலுங்கு தேசம் கட்சியினா் வாக்கு சேகரிப்பு :
தமிழக - ஆந்திர மாநில எல்லையோர கிராமமமான ஆம்பூா் தொகுதிக்கு உட்பட்ட வெலத்திகாமணிபெண்டா. மாதகடப்பா மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சியின் ராமகுப்பம் மண்டல பொறுப்பாளரும், மின் பகிா்மான கழக இயக்குநருமான நன்னியாலா மனோகரன், விவசாய அணி அமைப்பாளா் ராஜேந்திரா, பழங்குடி அணியின் அமைப்பாளா் ஜெயபிரகாஷ், குப்பம் தொகுதியின் வாக்கு சாவடிகள் அமைப்பாளா் ஆரிமாணிபெண்டா பாபு ஆகியோா் வாக்கு சேகரித்தனா்.
தொடர்புடையது

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தோட்டத் தொழிலாளா்களிடம் வாக்கு சேகரிப்பு

கும்பகோணத்தில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மக்களவை உறுப்பினா் பிரசாரம்

கொடைக்கானலில் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

ஈஸ்டா் பண்டிகை: வாழ்த்து தெரிவித்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

