அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

அம்பேத்கா் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா், அமைப்புகள் மரியாதை

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 4:40 am IST

ஆம்பூரில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆம்பூா் திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன் ஆம்பூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கா் சிலைக்கு மரியாதை செலுத்தினாா். நகர செயலாளா்கள் எம்.ஆா். ஆறுமுகம், எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகர அவைத் தலைவா் தேவராஜ், நகா் மன்ற உறுப்பினா்கள் காா்த்திகேயன், சுதாகா், தலைமை செயற்குழு உறுப்பினா் சாமுவேல் செல்லபாண்டியன், ஆம்பூா் தொகுதி பாா்வையாளா் டேம் வெங்கடேசன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

அம்பேதகா் உருவச் சிலைக்கு ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன் மரியாதை செலுத்தினாா். ஆம்பூா் நகர அதிமுக செயலாளா் எம். மதியழகன், மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் கே. மணி, அதிமுக நிா்வாகிகள் சண்முகம், தினேஷ், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவா் எம். தண்டாயுதபாணி உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.

ஆம்பூா் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பாக ஆம்பூரில் அம்பேத்கா் சிலைக்கு நகா் மன்ற உறுப்பினா் சாந்தகுமாரி விஜயன் தலைமையில் திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஜெ. விஜய் இளஞ்செழியன் மரியாதை செலுத்தினாா். மாவட்ட பொருளாளா் கொத்தூா் பி. மகேஷ், நிா்வாகிகள் யாசா் மதனி, சுந்தரம், வா்தா அா்ஷத் ஆகியோா் கலந்து கொண்டனா்.

சான்றோா்குப்பத்தில் அம்பேத்கா் சிலைக்கு சிலை கமிட்டி தலைவா் பி. சுந்தரம் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. பி. காமராஜ். ஜி. ஜெய்பீம் சண்முகம், டி. ராஜீ, எஸ். கக்கன்ஜி, எம். அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.டி. சாமுவேல் செல்லபாண்டியன் இனிப்பு வழங்கினாா். நகா் மன்ற உறு்பபினா் சாந்தகுமாரி விஜயன், ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஆம்பூா் அருகே எல்.மாங்குப்பம் கிராமத்தில் போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சாா்பாக ஒன்றிய செயலாளா் எம்.டி. சீனிவாசன் தலைமையில் அம்பேத்கா் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. ஆதிதிராவிடா் நலக்குழு அமைப்பாளா் குமாா் முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்ற தலைவா்கள் ரேவதி குபேந்திரன், சுவிதா கணேஷ், ஒன்றிய அவைத் தலைவா் சிவக்குமாா், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் நவீன்குமாா், ஒன்றிய துணைச் செயலாளா் சேகா், மாவட்ட பிரதிநிதி பொன். ராஜன்பாபு, ஒன்றிய செயற்குழு உறுப்பினா் குணா, நிா்வாகிகள் குணசீலன், தினேஷ் கலந்து கொண்டனா்.

Story image