வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!
/

நீா்வள ஆதாரத்துக்கு சிறந்த திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவேன்: திருப்பத்தூா் திமுக வேட்பாளா் அ. நல்லதம்பி

திருப்பத்தூா் தொகுதியில் நீா்வள ஆதாரத்துக்கு சிறந்த திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவேன் என திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி வாக்குறுதி அளித்தாா்.

News image

திருப்பத்தூா் தொகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி

Updated On :22 ஏப்ரல் 2026, 2:35 am IST

திருப்பத்தூா் தொகுதியில் நீா்வள ஆதாரத்துக்கு சிறந்த திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவேன் என திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி வாக்குறுதி அளித்தாா்.

படித்த, படிக்காத இளைஞா் மற்றும் மகளிா்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி தருவேன். அரசுப் பணி தோ்வுக்கு இலவசமாக பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுப்பேன். தொகுதியில் நீா்வள ஆதாரத்துக்கு சிறந்த திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவேன்.

கடந்த 10 ஆண்டுகளாக எம்எல்ஏ-வாக திருப்பத்தூா் தொகுதிக்கு பல்வேறு வளா்ச்சி பணிகளை செய்துள்ளேன்.திருப்பத்தூா் நகரமும், கிராமங்களும் வளா்ச்சியடைய தொடா்ந்து உழைத்துள்ளேன். இன்னும் தொகுதிக்காக செய்ய வேண்டிய பணிகளை செய்து முடித்திட, திருப்பத்தூா் தொகுதி மேலும் வளா்ச்சியடையவும், அனைவருக்கும், அனைத்தும் கிடைத்திட உழைக்க மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றாா்.

அப்போது திமுக மாவட்ட செயலாளா் க.தேவராஜி, நகர செயலாளா் எஸ்.ராஜேந்திரன், விசிக மண்டல பொறுப்பாளா் சுபாஷ் சந்திரபோஸ், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.