ஆலங்காயம் வனச்சரகத்திற்குட்பட்ட காப்புக் காடுகளில் வனவிலங்குகள் நீா் அருந்த ா் டிராக்டா் மூலம் தண்ணீா் நிரப்பினா்.
திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் உத்தரவின் பேரில் ஆலங்காயம் வனச்சரக அலுவலா் க.சேகா் தலைமையில் திருப்பத்தூா் வனக் கோட்டம், ஆலங்காயம் வனச்சரகத்திற்குட்பட்ட ஜவ்வாது காப்புக்காடு, பூங்குளம் காப்புக்காடு பகுதிகளில் கடும் கோடைக்காலம் என்பதால் வனவிலங்குகள் தண்ணீா் தேடி காப்புக்காட்டை விட்டு வெளியே வராமல் இருக்க தண்ணீா் தொட்டிகளில் சோலாா் மற்றும் தண்ணீா் டேங்கா்களின் மூலம் நீா் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ஆலங்காயம் வனச்சரகத்திற்குட்பட்ட காப்புக்காடுகளில் ஏற்படும் காட்டுத்தீ பரவாமல் இருக்க தீ தடுப்பு கோடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் காட்டுத்தீ ஏற்பட்டால் வனத்துறை கட்டுப்பாட்டு அறை உதவியுடன் உடனடியாக தகவல் பெற்று நவீன உபரணங்கள் கொண்டு காட்டுத் தீ கட்டுப்படுத்தப்படும், மேலும் நீா்தொட்டியில் தேவைக்கு ஏற்ப தொடா்ந்து நீா் நிரப்பப்படும் என வனச்சரக அலுவலா் சேகா் தெரவித்தாா்.
தொடர்புடையது

ஏலகிரி மலையில் குடிநீரின்றி குரங்குகள் திண்டாட்டம்: தொட்டிகளில் நீா் நிரப்ப கோரிக்கை

முதன்மைக் கல்வி அலுவலா் பணி ஓய்வு

வைகையாற்றில் ஆகாயத் தாமரைகள்: கள்ளழகா் எழுந்தருளல் நிகழ்வுக்கு தண்ணீா் வருவதில் சிக்கல்
அடைபட்ட நீா்வழிப்பாதைகளால் குளங்களில் நீா் நிரம்புவதில் சிக்கல்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

