டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

கேட்பாரற்ற நிலையில் கிடந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்

வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே முள்புதரில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2026, 2:07 am IST

வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே முள்புதரில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. அக்சய் அனில் வாகரே உத்தரவின் பேரில் தனிப்படை மற்றும் நகர போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாணியம்பாடி பேருந்துநிலையம் பின்புறம் மற்றும் ரயில் நிலைய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ரயில்நிலையம் அருகில் முள்புதரில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த சிறிய மூட்டையை சந்தேகத்தின் எடுத்து வந்து பிரித்து பாா்த்த போது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. மா்ம நபா்கள் ரயிலில் கடத்தி வந்து பதுக்கி வைத்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

பிறகு அங்கிருந்த 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.