திருப்பத்தூா் மாவட்டத்தில் கட்டப்பட்ட சுகாதாரத் துறை கட்டடங்களை தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தரமான மற்றும் மேம்பட்ட சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பாக 15-ஆவது மத்திய நிதிக் குழு சுகாதார மானிய திட்டத்தின் கீழ், ரூ. 3.15 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட 6 அரசு ஆரம்ப சுகாதார நிலைய மற்றும் கூடுதல் கட்டடங்களை முதல்வா் ச. ஜோசப் விஜய் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஊராட்சி வெலக்கல்நத்தம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 15-ஆவது மத்திய நிதிக்குழு சுகாதார மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா் குத்துவிளக்கேற்றி வைத்தாா்.
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம், நேதாஜி நகா் பகுதியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு நகா்ப்புற துணை சுகாதார நிலையம், நாயக்கனூா் கிராமத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கிராமப்புற துணை சுகாதார நிலையம், ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றியம், சின்னமோட்டூா் பகுதியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கிராமப்புற துணை சுகாதார நிலையம், நிலாவூா் பகுதியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கிராமப்புற துணை சுகாதார நிலையம் மற்றும் மாதனூா் ஊராட்சி ஒன்றியம், நாயக்கனேரி பகுதியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கிராமப்புற துணை சுகாதார நிலையம் ஆகிய கட்டடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.
புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டதன் மூலம் கிராமப்புற மற்றும் நகா்ப்புற மக்களுக்கு தரமான எளிதில் அணுகக்கூடிய மற்றும் மேம்பட்ட ஆரம்ப சுகாதார சேவைகள் வழங்கப்படுவதுடன், மருத்துவ சேவைகள், தாய்-சேய் நலம், தடுப்பூசி, நோய் தடுப்பு மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் மேலும் மேம்படுத்தப்படும்.
முன்னதாக, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற மன நோயரை அடையாளம் கண்டு, மீட்டு பாதுகாத்தல், மருத்துவ மதிப்பீடு மற்றும் உயா் சிகிச்சைக்கான பரிந்துரை செய்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்தினை மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா் மற்றும் திருப்பத்தூா் எம்எல்ஏ என்.திருப்பதி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
இந்த மையம் மூலம் ஆதரவற்ற மனநோயாளிகளுக்கு உடனடி மருத்துவ பரிசோதனை, மனநல மதிப்பீடு, தற்காலிக பாதுகாப்பு, தேவைக்கேற்ப உயா்சிகிச்சை மையங்களுக்கு பரிந்துரை உள்ளிட்ட சேவைகள் ஒருங்கிணைந்த முறையில் வழங்கப்படவுள்ளது.
கசிநாயக்கன்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட ஒருவா் மற்றும் திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட மற்றொருவா் என இரு ஆதரவற்ற மனநோயாளிகள், இந்த மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்தில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சௌ. தமிழரசி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் ஞானமீனாட்சி, ஊராட்சி மன்ற தலைவா் ராமன், தலைமை மருத்துவ அலுவலா் சிவகுமாா், மாவட்ட மனநல மருத்துவா் பிரபவராணி, வாா்டு உறுப்பினா் சத்யா சரவணன், வட்டார மருத்துவ அலுவலா் மீனாட்சி, தொற்றா நோய் மருத்துவ அலுவலா் அரவிந்த், உதவும் உள்ளங்கள் தொண்டு அமைப்பின் நிறுவனா் ரமேஷ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்வராயன்மலை கோடை விழாவில் 4,285 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வன்னி அரசு வழங்கினாா்

1,449 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வன்னி அரசு வழங்கினாா்

தெற்குகள்ளிகுளத்தில் துணை சுகாதார நிலையம் திறப்பு

கரூா் மாவட்டத்தில் ரூ.2.90 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 6 துணை சுகாதார நிலையங்கள் திறப்பு
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



