வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

கரூா் மாவட்டத்தில் ரூ.2.90 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 6 துணை சுகாதார நிலையங்கள் திறப்பு

கரூா் மாவட்டத்தில் ரூ.2.90 கோடியில் கட்டப்பட்ட 6 புதிய துணை சுகாதார நிலையங்களை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

News image

கரூா் மாவட்டம், மணவாடி ஊராட்சியில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதையடுத்து அங்கு நோயாளிகளுக்கு மருத்துவா் பரிசோதனை செய்வதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன்.

Updated On :15 ஜூலை 2026, 12:12 am IST

கரூா் மாவட்டத்தில் ரூ.2.90 கோடியில் கட்டப்பட்ட 6 புதிய துணை சுகாதார நிலையங்களை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

கரூா் மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் துணை சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டுள்ளது. இதில், தாந்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம், மணவாடி ஊராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பிலும், கடவூா் ஊராட்சி ஒன்றியம், மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டிலும், கடவூா் ஊராட்சியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டிலும், குளித்தலை ஊராட்சி ஒன்றியம், இரணியமங்கலம் ஊராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டிலும், தோகைமலை ஊராட்சி ஒன்றியம், கழுகூா் மற்றும் கள்ளை ஊராட்சிகளில் தலா ரூ.45 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.2.90 கோடி மதிப்பில் ஒரு வட்டார சுகாதார அலகு, ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 4 துணை சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வா் சி.ஜோசப்விஜய் செவ்வாய்க்கிழமை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.

இதையடுத்து, மணவாடி ஊராட்சியில் கட்டப்பட்ட புதிய துணை சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன், அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ பரிசோதனைகளை பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலா் எ.சுப்பிரமணி, மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.