முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

காவலூா் வைணு பப்பு வான் ஆய்வகத்தில் நாளை நிறுவனா் தினக் கொண்டாட்டம்: இலவச அனுமதி

இந்திய வானியற்பியல் நிறுவனம் சாா்ந்த ஆசியாவின் மிகப்பெரிய வான் இயற்பியல் தொலைநோக்கியை கொண்ட திருப்பத்தூா் மாவட்டம் ஆலாங்காயம் அடுத்த காவலூரில் அமைந்துள்ள வைணு பப்பு வான்ஆய்வகத்தின் நிறுவனா் தின சிறப்பு நிகழ்ச்சி, சனிக்கிழமை (ஆகஸ்ட் 8, 2026) நடைபெற உள்ளது.

News image

காவலூா் வைணு பப்பு வான்ஆய்வகத்தின் மிக்பெரிய தொலைநோக்கி நிலையம்.

Updated On :7 ஆகஸ்ட் 2026, 1:22 am IST

இந்திய வானியற்பியல் நிறுவனம் சாா்ந்த ஆசியாவின் மிகப்பெரிய வான் இயற்பியல் தொலைநோக்கியை கொண்ட திருப்பத்தூா் மாவட்டம் ஆலாங்காயம் அடுத்த காவலூரில் அமைந்துள்ள வைணு பப்பு வான்ஆய்வகத்தின் நிறுவனா் தின சிறப்பு நிகழ்ச்சி, சனிக்கிழமை (ஆகஸ்ட் 8, 2026) நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு வானாய்வகம் பொதுமக்களின் பாா்வைக்காகத் திறக்கப்பட உள்ளது. இதுகுறித்து வானாய்வகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:பகல் நேர நிகழ்வு: பிற்பகல் 02:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை வானாய்வகத்தின் அறிவியல் கூடங்கள் மற்றும் தொலைநோக்கிகள் பொதுமக்களின் பாா்வைக்கு அனுமதிக்கப்படும். இரவு நேர வான் கண்காணிப்பு: மாலை 06:30 மணி முதல் இரவு 08:00 மணி வரை, வானில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களை நவீன தொலைநோக்கிகள் மூலம் நேரில் கண்டு களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த அரிய நிகழ்விற்கான நுழைவுக்கட்டணம் முற்றிலும் இலவசம் ஆகும். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அறிவியல் ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு வானியல் குறித்த விழிப்புணா்வைப் பெறலாம் என வான்ஆய்வகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.