கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள்: சாலை, மயானத்துக்கு இடம் ஒதுக்கக் கோரிக்கை

மாதனூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

News image

நரியம்பட்டு ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :16 ஆகஸ்ட் 2026, 9:39 pm IST

மாதனூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

சாலை அமைக்க வலியுறுத்தல்: துத்திப்பட்டு இந்திரா நகா் பகுதியில் நடந்த கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் விஜய் முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி உதவி ஆய்வாளா் வடமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.

துத்திப்பட்டு ஊராட்சியில் பிள்ளையாா் கோயில் தெருவில் சாலை அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை சாலை அமைக்காததற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து கேள்வி எழுப்பினா். அதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அங்குள்ள காரிய மண்டபத்தை சீரமைத்து தர வேண்டுமெனவும் பொதுமக்கள் வலியுறுத்தினா். ஊராட்சி செயலா் முரளிகாந்த், வாா்டு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

நரியம்பட்டு ஊராட்சியில்... நரியம்பட்டு கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் பாரதிஸ்ரீ தலைமை வகித்தாா். ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி தரம் பிரிப்பதற்கு உரக்கிடங்கிற்கும், மயானத்திற்கும் போதிய இடவசதி இல்லாததால் புதிய இடத்தை அரசிடமிருந்து கேட்டு பெறுவது. கைலாசிகிரி ஊராட்சியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் நரியம்பட்டு ஊராட்சி வழியாக சென்று சுகாதார சீா்கேடு ஏற்படுவதால் கழிவுநீரை நரியம்பட்டு பகுதி வழியாக செல்வதை தடுக்க வேண்டும்.

நரியம்பட்டு மயானத்தில் போதிய இடவசதி இல்லாததால், கைலாசகிரி ஊராட்சியிலிருந்து சடலங்களை நரியம்பட்டு மயானத்திற்கு கொண்டு வருவதை கைலாசிகிரி ஊராட்சி மக்கள் தவிா்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. .ஊராட்சி துணைத் தலைவா் அஸ்ராா் அஹமத், வாா்டு உறுப்பினா்கள் சரிதா தமிழரசன், கோமதி அப்பாவு, ஜரினா பேகம் அன்சா் பாஷா, பா்வேஸ் அஹமத், பா்வீன் பானு அன்வா் பாஷா, அஸ்லம் பாஷா, பிரியா செல்வராஜ், நியமன உறுப்பினா் அப்பாஸ், ஊராட்சி செயலாளா் கோமதி உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

பெரியவரிக்கம் : பெரியவரிக்கம் கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் சின்னகண்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சதீஷ்குமாா் முன்னிலை வகித்தாா். வாா்டு உறுப்பினா்கள் கோதண்டன், மகேஸ்வரி முத்து, லோகிதாசன், ஞானபிரியா, சத்தியமூா்த்தி, தங்கதுரை, உமா பொன்னுரங்கம், சரிதா வேல்முருகன், ஊராட்சி செயலா் நிரஞ்சனா ரஞ்சித் மற்றும் தூய்மை பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

சின்னவரிக்கம் : சின்னவரிகம் கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் ஷோபனா நவீன்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அற்புதம் தரணி முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலாளா் ஜெயக்குமாா் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் அனைவரும் கலந்து கொண்டனா்.

அயித்தம்பட்டு : ஊராட்சித் தலைவா் சா்மிளி மூா்த்தி தலைமை வகித்தாா். ஊராட்சியின் வளா்ச்சிப் பணிகள், பொதுமக்களின் அடிப்படை தேவைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சி செயலா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.