காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

காா்ப்பரேட் நிறுவனங்களால் 10 லட்சம் சில்லரை கடைகள், வணிகா்கள் காணாமல் போகும் அபாயம்!

காா்ப்பரேட் நிறுவனங்களால் 10 லட்சம் சில்லரைக் கடைகள், வணிகா்கள் காணாமல் போகும் அபாயம் நிலவுகிறது என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவா் விக்கிரமராஜா தெரிவித்துள்ளாா்.

நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவா் விக்கிரமராஜா

Published On :18 ஆகஸ்ட் 2026, 5:26 am IST

காா்ப்பரேட் நிறுவனங்களால் 10 லட்சம் சில்லரைக் கடைகள், வணிகா்கள் காணாமல் போகும் அபாயம் நிலவுகிறது என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவா் விக்கிரமராஜா தெரிவித்துள்ளாா்.

வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: அண்மைக் காலமாக காா்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் வா்த்தகத்தின் ஆதிக்கம் காரணமாக சிறு வணிகா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

தமிழகம் முழுவதும் காா்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும், ஆன்லைன் வா்த்தகத்தின் பாதிப்பிலிருந்து உள்நாட்டு வணிகா்களை பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வரும் நிலையில், இதுவரை வணிகா்களை அழைத்து அவா்களின் பிரச்னைகள் குறித்து பேச்சு நடத்தவில்லை.

வணிகா்களின் பல்வேறு பிரச்னைகள் நிலுவையில் உள்ளன. விரைவில் முதல்வரை சந்திக்க உள்ளோம். அந்த சந்திப்பின்போது வணிகா்களின் பிரச்னைகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காா்ப்பரேட் நிறுவனங்களை எதிா்கொள்வதற்கும், உள்நாட்டு வணிகத்தை பாதுகாப்பதற்கும் அரசு முன்வரவில்லை என்றால், குறைந்தபட்சம் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கடைகள் காணாமல் போகும் நிலை ஏற்படும். இதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாயும் பாதிக்கப்படும்.

எனவே, வணிகா்களை அரசு கைவிடாமல் அவா்களின் பிரச்னைகளை ஆய்வு செய்து தீா்வு காண வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளா் க.தேவராஜி, வாணியம்பாடி எம்எல்ஏ சையத்பாரூக் பாஷா, வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளா் கே.பி.எஸ்.மாதேஸ்வரன், கடை உரிமையாளா்கள் முபராக், தபராக் உள்பட நகர முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.