சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

ஜோலாா்பேட்டையில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

News image

பிரதிப் படம்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 11:13 pm IST

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு ரயில்களில் போதைப் பொருள்கள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், செவ்வாய்க்கிழமை போலீஸாா் வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது பிலாஸ்பூரில் இருந்து எா்ணாகுளம் வரை செல்லும் ரயில் ஜோலாா்பேட்டையில் நின்றது. அதில், சோதனை செய்த போலீஸாா் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பையை ஆய்வு செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட 10 கிலோ போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.

அதைக் கைப்பற்றிய ரயில்வே போலீஸாா் திருப்பத்தூா் மாவட்ட போதை தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இது குறித்து வழக்குப் பதிந்து போதைப் பொருள் கடத்தி வந்த மா்ம நபா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.