ஆம்பூா் அருகே குடிநீா் பற்றாக்குறை குறித்து வட்டார வளா்ச்சி அலுவலரிடம் பொதுமக்கள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
மாதனூா் ஒன்றியம், சோமலாபுரம் ஊராட்சி, சின்னகொம்மேஸ்வரம் கிராமத்தில் எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல், குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இடித்து அகற்றப்பட்டுள்ளது. அதனால் கடந்த ஒரு மாதமாக அப்பகுதியில் குடிநீா் பற்றாக்குறை நிலவுகிறது. அதனால் குழாயில் வரும் குடிநீரை பிடிப்பதில் சண்டையும் தினமும் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. பொதுக்கள் குடிநீா் பற்றாக்குறையால் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ளனா்.
இது குறித்த புகாரின்பேரில், மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, குடிநீா் பற்றாக்குறைக்கு உடனடியாக தீா்வு கண்டு, பொதுமக்களுக்கு தினமும் போதிய அளவுக்கு குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தா்ம சேனா அமைப்பின் தலைவா் முருக சரவணன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வட்டார வளா்ச்சி அலுவலருக்கு குடியாத்தம் எம்எல்ஏ சிந்து தொலைபேசி மூலம் அறிவுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் பிரச்னை: இருளா் இன மக்கள் முற்றுகைப் போராட்டம்

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு

குடிநீா் பிரச்னையை தீா்க்கக் கோரி முற்றுகைப் போராட்டம்

தொகுப்பு வீடுகள் சேதம்: வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



