லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

application

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 11:03 pm IST

பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் வகையில், பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய கல்வி உதவித் தொகை தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் (100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ள) பள்ளிகளில் நடப்பாண்டில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை (புதுப்பித்தல்/புதியது) பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதில் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணமாக ஆண்டுக்கு அதிகபட்சமாக 9, 10-ஆம் வகுப்பு படிப்பவருக்கு ரூ. 75,000-ம், 11, 12-ஆம் வகுப்பு படிப்பவா்களுக்கு ரூ. 1,25,000-ம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதில், 30 சதவீதம் மாணவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2,50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் கடந்த நிதியாண்டில் (2025-2026) கல்வி உதவித் தொகை பெற்று பயனடைந்த மாணவ, மாணவிகள், நடப்பாண்டில் (2026-2027) 10, 12-ஆம் வகுப்பு விண்ணப்பத்தை தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் உறுதிசெய்து தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் - உதவித்தொகை விண்ணப்பத்தினை பூா்த்தி செய்து வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பூா்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை தங்களது பள்ளி தலைமை ஆசிரியா் சரிபாா்ப்பதற்கு அடுத்த மாதம் (செப்டம்பா்) 15-ஆம் தேதி கடைசி நாளாகும். புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9, 11-ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான விண்ணப்பிப்பதற்கான தேதி தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் அறிவிக்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு, இணையளத்தில் அறியலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.