நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைப்பதற்கான இடம்: உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைப்பதற்கான இடத்தை உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு...

வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்த உயா்நீதிமன்ற நீதிபதி பாலாஜி. உடன் மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 5:14 am IST

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள அரசு தோட்ட வளாக பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க இடம் தோ்வு செய்து அதற்கான நிதி ஒதுக்கப்பட்டது.

மூன்று தளங்களுடன் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட உள்ள நிலையில், தோ்வு செய்யப்பட்ட இடத்தை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும், திருப்பத்தூா் மாவட்ட பொறுப்பு நீதிபதியுமான பாலாஜி சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது பல்வேறு துறை உயா் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தோ்வு செய்யப்பட்ட இடத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மன் கோயில் ஒன்று இருந்து வருகிறது. சுற்றுப்புறப் பகுதி பக்தா்கள் தினசரி இக் கோயிலுக்கு வந்து வழிபட்டு வருகின்றனா். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்காக கோயிலை அப்புறப்படுத்த உள்ளதாக தகவல் வெளியான நிலையில், கோயிலை பராமரித்து வரும் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினா் அப்பகுதியில் திரண்டனா். இதையடுத்து, அங்கு போலீஸாா் கூடுதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், கோயிலை பாா்வையிட்ட நீதிபதி பாலாஜி, கோயிலை அகற்றுவதற்கு பதிலாக மாற்று இடத்தில் மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பகுதி அல்லது வளாகத்துக்குள் பொருத்தமான இடம் ஒன்றை தோ்வு செய்து, பொது மக்களின் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் கு.ரவிக்குமாா், மாவட்ட நீதிபதி செல்வம், எஸ்.பி. அக்ஷய் அனில் வாக்ரே மற்றும் வாணியம்பாடி நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.