நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ரூ.34.50 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டடங்கள்: முதல்வா் திறந்து வைத்தாா்

அங்கன்வாடி மைய கட்டட திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றிய மாதனூா் ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன்.

News image

அங்கன்வாடி மைய கட்டட திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றிய மாதனூா் ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன்.

Updated On :7 பிப்ரவரி 2026, 12:00 am

ஆம்பூா் அருகே சோமலாபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டடங்களை முதல்வா் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

மாதனூா் ஒன்றியம் சோமலாபுரம் ஊராட்சி பழையமனை பகுதி மற்றும் சின்னகொம்மேஸ்வரம் ஆகிய கிராமங்களில் தலா ரூ.17.25 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய அங்கன்வாடி மைய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் எஸ்.எம். சண்முகம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். மகராசி, போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.டி. சீனிவாசன், ஊராட்சி துணைத் தலைவா் ரமாபாய் டேனியல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாதனூா் ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் குத்துவிளக்கேற்றினாா்.

திமுக ஒன்றிய அவைத் தலைவா் சிவக்குமாா், மாவட்ட பிரதிநிதி பொன் ராஜன்பாபு, ஒன்றியக்குழு உறுப்பினா் முத்து, ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் வி.டி. சுதாகா், ராஜ்குமாா், குமரேசன், ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் குபேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளா் தமிழ்செல்வன், அங்கன்வாடி பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.