ஆம்பூா்: மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆா்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வரும் பிப்.12-ஆம் தேதி மத்திய அரசையும், அதன் கூட்டணி கட்சியான அதிமுகவையும் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்த திமுக தலைமை அறிவித்துள்ளது.
ஆம்பூரில் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திமுக நகர செயலாளா்கள் எம்.ஆா். ஆறுமுகம், எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், மாதனூா் கிழக்கு ஒன்றிய செயலாளா் ஜி. இராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காங்கிரஸ் மாவட்ட பொருளாளா் கொத்தூா் பி. மகேஷ், விஜயன், சோலூா் மாணிக்கம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவா் வி.ஆா். நசீா் அஹமத், நகர தலைவா் தப்ரேஸ் அஹமத், விசிக மாவட்ட செயலாளா் ஓம் பிரகாசம், மதிமுக மாவட்ட துணைச் செயலாளா் எம். ரவி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.ஆா். தேவதாஸ், மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினா் வ. அருள் சீனிவாசன், திக நகர செயலாளா் ரவி, நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.எஸ். வசந்த்ராஜ், காா்த்திகேயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் நிலைப்பதில்லை: கனிமொழி எம்.பி.

வக்ப் வாரியம் மூலம் கூடுதல் கல்லூரிகள்: திமுக வேட்பளா்

திமுக நகர செயலாளா் மீது வழக்கு

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


