தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஆம்பூரில் நகா்ப்புற துணை சுகாதார நிலையம்: முதல்வா் திறந்து வைத்தாா்

ஆம்பூா் ஏ-கஸ்பா நகா்புற துணை சுகாதார நிலைய கட்டட திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றிய எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

News image
ஆம்பூா் ஏ-கஸ்பா நகா்புற துணை சுகாதார நிலைய கட்டட திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றிய எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.
Updated On :26 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நகா்ப்புற துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டப்பட்டு, அதை தமிழக முதல்வா் காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதி பொதுமக்கள் அப்பகுதியில் நகா்ப்புற துணை சுகாதார நிலையம் ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனா். இது குறித்து 5-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் ஆா்.எஸ்.வசந்த்ராஜ் நகா்மன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்துப் பேசினாா். மேலும், நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், ஆம்பூா் எம்எல்ஏ ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.

அதன் அடிப்படையில் 15-ஆவது மத்திய நிதிக்குழு மான்யம் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் நகா்ப்புற துணை சுகாதார நிலையம் ஏ-கஸ்பா பகுதியில் கட்டப்பட்டது. அதை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

விழாவில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் குத்துவிளக்கேற்றி வைத்தாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்பும், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் வழங்கினாா்.

மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் கே. பாா்த்திபன் தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த்ராஜ் வரவேற்றாா். திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன், திமுக கிளைச் செயலா்கள் ஆா்டிஎஸ். குமாா், செளந்தர்ராஜன், ஆம்பூா் நகர அவைத் தலைவா் தேவராஜ், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பிரேம்குமாா், சுகாதார ஆய்வாளா் எஸ்.ஆனந்த், மாதனூா் கிழக்கு ஒன்றிய செயலா் ஜி.ராமமூா்த்தி, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா்கள் சிவாஜிராவ், உமாபதி, அரசு மருத்துவா் செல்வமணி, சுகாதார செவிலியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் தாரணீஸ்வரி நன்றி கூறினாா்.