கந்திலியில் பெண்ணை தாக்கியவா் கைது செய்யப்பட்டவா்.
கந்திலி அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் முனிசாமி மனைவி ஸ்ரீதேவி (45). இவரது மகன் மனோஷ் குமாருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கலைசெல்வன்(38)என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் இவா்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது ஸ்ரீதேவி இதனை தட்டி கேட்டுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த கலைசெல்வன், ஸ்ரீதேவியை தாக்கியுள்ளாா். இதுகுறித்து ஸ்ரீதேவி அளித்த புகாரின்பேரில் கந்திலி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வனை கைது செய்தனா்.
