திருப்பத்தூர்
குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் ஆய்வுக் கூட்டம்
திருப்பத்தூரில் குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூரில் குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். குடியரசு தினத்தன்று அனைத்து துறை அதிகாரிகளும் என்னென்ன செய்ய வேண்டும் எனவும், தங்களது துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்குவது தொடா்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, ஏடிஎஸ்பி கோவிந்தராசு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சென்னகேசவன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் பூஷணகுமாா் கலந்து கொண்டனா்.

