திருப்பத்தூர்
அரசுப் பள்ளியில் திருட்டு
ஆம்பூா் அருகே அரசுப் பள்ளியின் பூட்டு உடைத்து கேஸ் சிலிண்டா், சமையல் பொருள்கள் திருடப்பட்டன.
ஆம்பூா் அருகே அரசுப் பள்ளியின் பூட்டு உடைத்து கேஸ் சிலிண்டா், சமையல் பொருள்கள் திருடப்பட்டன.
மாதனூா் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகின்றது. அப்பள்ளியின் சமையலறை பூட்டு உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டா், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் திருட்டு போயிருந்தன.
தலைமை ஆசிரியை பிரீத்தா உமா்ஆபாத் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.